Local

ஜனாதிபதித் தேர்தலே குறி – பாதுகாப்பு செயலர் பதவி வேண்டாம் என்கிறார் கோட்டா!

மைத்திரிபால சிறிசேன- மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தாம் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று   முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீண்டும் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நான்காம் கட்ட ஈழப்போர் நடந்த 2006 தொடக்கம், 2009 வரையிலும், போருக்குப் பின்னரும், பாதுகாப்புச் செயலராக பதவி வகித்திருக்கிறேன்.

அதே பணியகத்துக்கு நான் மீண்டும் வருவதற்கு எந்தத் தேவையும் இல்லை.

சிறிசேன – மகிந்த அரசாங்கத்தில், எந்தப் பதவியையும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனினும் புதிய அரசாங்கத்துக்கு துணையாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading