World

தலாய் லாமாவின் தலை குறி ! ஐவர் மடக்கிப்பிடிப்பு

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கர்நாடகாவில் கைது செய்தனர்.

திபெத் தலைவரும், புத்த மத குருவுமான தலாய் லாமா கடந்த ஜனவரி 19-ம் திகதி பிஹார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மஹா போதி சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில், அங்கு சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து தலாய் லாமா, லால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜேஎம்பி அமைப்பினர் மீது வழக்கு தொடர்ந்தனர். பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் இவ்வழக்கில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த 27-ம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஜேஎம்பி அமைப்பினரை தேடி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநி லம் ராம்நகரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜேஎம்பி அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமது அலி, ஃபைகம்பர் ஷேக், முனீர் நூர், அஸ்லாம் மொஹீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

ரக சிய அறையில் பதுங்கி இருந்தவர் களை உள்ளூர் போலீஸா ரின் உதவியுடன், விசாரணைக் காக பிஹார் அழைத்துச் சென்றுள் ளதாகவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாட்னா சிறப்பு நீதிமன்றத் தில் 5 பேரையும் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க அதி காரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading