Up Country

தீபாவளி முற்பணம்கோரி தொழிலாளர்கள் ஹட்டனில் போராட்டம்!

அக்கரப்பத்தனை நியூ பிரஸ்டன் தோட்ட தொழிலாளர்கள், 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும், தீபாவளி முற்பணம் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து 02.11.2018 அன்று கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200 தோட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பணவுகளை உடனடியாக வழங்குமாறும் 1000ருபா சம்பள உயர்வையும் காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல் வாதிகள் பெற்று தரவேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யான வார்த்தைகளை இனிமேலும் நாங்கள் நம்பபோவதில்லை என தெரிவித்ததோடு, சம்பள அதிகரிப்பினை பெற்றுகொடுக்காவிட்டால் நல்ல பாடம் புகட்டுவதாகவும் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினையும் உடனடியாக நிறுத்துவோம் என இவர்கள் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading