Local

தேசிய பாடசாலை அதிபர் பதவி நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு! – கல்வி அமைச்சு அறிவிப்பு

தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சால் எதிர்வரும் ஒக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 1,2,3,5,8,9,10 ஆகிய தினங்களில் நடத்தப்பட இருந்த தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சையானது குறித்த தினத்தில் நடாத்துவதற்கு சாத்தியமற்ற நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading