Local

நாடாளுமன்றம் கூடுமா? நாளை 8.30 இற்கு முடிவு!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று  இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சபாநாயகர் கருஜயசூரியவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை நாளை ( 14) கூட்டுவதற்குரிய ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்திருந்தார். எனினும், அவை கூடுவதற்கு முன்னரே ‘கலைப்பு’ உத்தரவும் அவரால் பிறப்பிக்கப்பட்டது. இவ்வுத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையிலேயே ‘முன்கூட்டியே’ தீர்மானத்தின் பிரகாரம் சபையைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.30 மணிக்க சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதே இறுதி முடிவெடுக்கப்படும் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading