Lead NewsLocal

பிரமுகர்கள் கொலைச் சதி: நாலக டி சில்வா ‘கப்சிப்’!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம் சுமார் 30 நிமிடங்கள் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நாமல் குமார ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல் அரசினால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குரல் மாதிரியை வழங்குமாறு நாலக டி சில்வாவுக்கு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குரல் பதிவை வழங்குவதற்காக இன்று வந்திந்த நாலக டி சில்வாவிடம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். இவை எதற்கும் அவர் பதில் வழங்காமல் நழுவிச் சென்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading