Cinema

மீண்டும் பரபரப்பை கிளப்புகிறார் சின்மயி! டுவிட்டரில் ஆபாச பேச்சு!

பாடகி சின்மயி ‘மீடு’ புகார் கூறி கோலிவுட்டையே கதிகலங்க வைத்தவர். வைரமுத்து, ராதாரவி என பலர் மீதும் அவர் பாலியல் புகார் கூறினார். ஆனால் அவர்கள் யார்மீதும் சின்மயி சட்டப்படி புகார் அளிக்கவில்லை.

உண்மையாக இருந்தால் ஏன் புகார் அளிக்கவில்லை என தினமும் பலரும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். அவர்களுடன் சின்மயி தினம்தோறும் சண்டை போடும் சம்பவம் ட்விட்டரில் நடந்துவருகிறது.

இன்று அப்படி ஒருவர் கேட்ட கேள்விக்கு சின்மயி கோபமாக பதில் அளித்துள்ளார்.

“உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி” என கூறிய அந்த நபரிடம், “நான் ரெடி.. மீடியாவை வர சொல்லுங்கள்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும்” என பதில் அளித்துள்ளார்.

மேலும் “கணவரை தவிர நீ யாரிடம் படுக்கிறாய் என கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்” என வழக்கறிஞரான அந்த நபரிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading