Local

வடக்கில் தாமரை மொட்டு மண்கவ்வும் – ஒப்புக்கொண்டார் அக்கட்சி எம்.பி.!

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிவாகை சூடும் என்று முன்னணியின் எம்.பியான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு, நெலும் மாவத்தையிலுள்ள தலைமையகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்குவாரானால் இரு கரங்களையும் உயர்த்தி ஆதரவை தெரிவிப்போம்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் எமது முன்னணியே வெற்றிபெறும். யானை, புலி, நரி கூட்டணியை நிச்சயம் தோற்கடிப்போம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால்கூட வடக்கு மாகாணசபையை தவிர ஏனைய அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading