Local

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்கத் தீர்மானம்!

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.

இதன்படி, சீனி மற்றும் பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளையே குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஒரு கிலோகிராம் பருப்பை 175 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சீனியை 110 ரூபாவிற்கும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களின் ஊடாக குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading