Lead News

அரபுலகை அடிமையாக்கிய அமெரிக்க அரசியல்!!

“அமெரிக்காவின் இரவுக்கான விருந்து” மத்திய கிழக்கில் என்னும் கனவு நனவாகுமா? அல்லது கனவில் மண் விழுமா? எனற நிலையில் இப்போது அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள், துருப்புக்கள் மற்றும் இலத்திரனியல் போர் ஆயுதங்கள் என எல்லாவற்றையும் அமெரிக்கா இப்போது தங்களுக்கு வசதியென கருதும் இடங்களில் நிறுத்தியுள்ளது அதேவேளை இஸ்ரவேலும் விரும்பியோ விரும்பாமலோ தாக்குதல் நடத்துவதற்காக தயார் நிலையில் இருந்தது. பத்திரிகைகள் ஏற்கனவே தாக்குதலுக்கான. “கடைசி 24 மணிநேரத்தை” எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால் எந்த யுத்தமும் இதுவரை அங்கு இல்லை. ஏன்?

டொனால் ட்ரம் ஒரு தடவைக்கி இரண்டு தடவைகள் சிந்திக்கிறார் காரணம் அவர் ஈரானைப் பற்றி பயப்படுகிறார் ஏனெனில் ஈரான் என்பது சிரியா வெனிசுவேலா போலல்ல இது ஒரு ஆயுத ரீதியாக நன்கு வளர்ச்சியடைந்த நாகரிகமான உயிரை துச்சமென மதிக்கும் மத உணர்வைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.

அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கையின் பிரகாரம் 1979க்கு பின்னர் ஈரானின் ஆட்சி எப்போதும் இல்லாதவாறு இப்போது பலயீனமாக உள்ளதாகவும் ஈரானின் நாணயம் ஒரு டாலருக்கு 1.51 மில்லியனாக சரிந்துள்ளது என்றும் அறிக்கை செய்தது மட்டுமல்லாது இப்போது ஈரானில போராட்டங்களின் உச்சம் குறைந்து தனிவடைந்துள்ளது அல்லது அவைகள் அடக்கப்பட்டுள்ளன என்ற விடயம்மும் தெரியவந்தது என்பதும் அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவியது போன்றுள்ளது .

அமெரிக்கா ஈரானை தாக்கினால் இது அனைவருக்கும் ஒரு பேரழிவு நிகழ்வாக அமையும் உதாரணமாக
அமெரிக்கா ஈரானை கடலில் முற்றுகையிட முடியும் ஆனால் பின்னர் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் இதன் காரணமாக சவுதிஅரேபியா,
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்தின் எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும் இதன் பலனாக உலகப் பொருளாதாரம் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

மேற்கூறிய நிலைமைகளை டொனால்ட் ட்ரம் சிந்திக்கவேண்டி இருக்கிறது காரணம் உலகத்தில் இவ்வாரான ஒரு நிலைமை ஏற்பட்டால் அது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும் இந்நிலை அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர்க்கு பாதிப்பை ஏற்படுத்தி ட்ரம் அமெரிக்காவிலிருந்து தூக்கி வீசப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் வளைகுடா முடியாட்சி நாடுகளும் அவருடன் பக்கபலமாக இருக்க இப்போது ஆர்வமாக இல்லை. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் அதன் நிலவள பிரதேசங்களை பயன்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளன. மேலும் சீனா, ரஸீயா என்பன தெஹ்ரானுக்கு அதிகளவு ஆயுதங்களையும் அனுப்பி ஈரானை யுத்தத்திக்கு தயார் செய்து வைத்துள்ளன.

டிரம்பைப் பொறுத்தவரை அவருக்கு ஈரான் மீது போர் தேவையில்லை அவருக்கு ஒரு “அறுவை சிகிச்சை” போன்ற தாக்குதல் நடவடிக்கைதான் தேவை அதாவது ஈரான் தலைமைக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு ஆட்சிக் கவிழ்ப்பும் இதன் மூலமாக மத்திய கிழக்குப் பிரதேசத்திலிருந்து ரஸீயாவினதும் சீனாவினதும் ஆதிக்கத்தை இல்லாமல் செய்து தனது சாம்ராஜியத்தை அங்கு நிலை நிறுத்துவது ஆனால் ஈரான் தங்களது மண்ணில் சிறு தாக்குதல் நடாத்தப்பட்டாலும் நாம் யுத்தத்திக்கு தயாராக முழுப் பலத்துடன் உள்ளோம் என்ற ஈரானின் நிலைப்பாடுதான் அமெரிக்காவை பயமுறுத்துகிறது ஆனால் ஈரானில் தலை துண்டிக்கபடுவதற்கு வாய்ப்பு குறைவாகவேயுள்ளது சில வேளை அமெரிக்காவுக்கு ஆழமறியாமல் காலை விட்ட நிலைமையும் ஏற்படலாம்.

இந்த யுத்தத்தில் ஈரான் வீழ்ந்தால் அல்லது ஈரானின் “தலை துண்டிக்கப்பட்டால்”, உலகம் உடனடியாக மாற்றமடையும்

1.சீனா உலகில் வழுவிழந்து விட்டுக்கொடுப்புக்களுடன் அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும் இல்லையெனில் அதனால் தலைநிமிர்ந்து நிற்பது கடினம்
2. ரஷ்யா மத்திய கிழக்கில் ஒரு கூட்டாளியை இழந்து தனிமைப்பட்ட ஒரு தேசமாக பலமிழந்துவிடும் அதாவது மத்திய கிழக்கு முழுவதுமாக ரஸீயாவிடமிருந்து கை நழுவிவிடும்.

03. எண்ணெய் வர்த்தக ரீதீயாக வளர்ச்சிபெறும் அமெரிக்கா இதனை சாதமாக பயன்படுத்தி சீனா ரஸீயாவுக்கெதிராக பொருளாதார தடைகளை விதித்து இவர்களை செல்லாக்காசாக்கிவிடும்.

4.டாலர் வலுவடையும், மேலும் இனிமேல் டாலர் மதிப்பிழப்பு என்ற கதையே இல்லாமல் போய்விடும் இதன் காரணமாக அமெரிக்காதான் எப்போதும் சுப்பர் பவர் என்பதை நிலை நிறுத்திக்கொள்ளும்.

ஒருவேளை இந்த யுத்தத்தில் ஈரான் அமெரிக்காவினால் முறியடிக்கப்படாத சக்தியாக இருந்தால் இதன் பின்விளைவுகள் முழுவதையும் பந்தி பந்தியாக எழுதாமல் அதனை மிகவும் சுருக்கமாக சொல்வதானால் இதுவே அமெரிக்காவுக்கான சாவுமணியாகவே இருக்கும் குறிப்பாக மத்திய கிழக்கில் .

எனவே, இனிமேல் ரஸீயாவும் சீனாவும் தலை நிமிர்ந்து நிற்கவும் இந்த உலகம் நவீன கால அடிமைத்துவத்திலிருந்து விடுபடவும் ஈரான் யுத்ததில் தோல்வியடையாமல் இருப்பதை ரஸீயாவும் சீனாவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் உறுதிப்டுத்திக்கொள்ள வேண்டும் இது ஈரானுக்கான கடைசி வாய்ப்பு என்பதை விடவும் ரஸீயாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்குமானது என்றுதான் சொல்ல முடியும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading