இடைத்தேர்தலில் வென்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5000 டொலர்… ட்ரம்ப் அறிவிப்பு
இடைகால தேர்தலில் குடியரசு கட்சி வென்றால் நாட்டின் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைகால தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனேட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்து கொண்டால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.
டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தத் தொகையை “Trump Dividend” என்று குறிப்பிட்டார்.
“குடியரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டாலர் கிடைக்கும்” என்று டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த இடைகால தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடத்தில் தனது பெயர் இருப்பதைப்போல கருதி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்களுக்கு தலா 5,000 டாலர் வழங்க வேண்டுமானால், அதற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படும்.
தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் காரணமாக மக்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நாட்டில் டிரம்பை ஆதரிப்போம் எண்ணிக்கை 30% ஆக சரிந்துள்ளது.என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

You must be logged in to post a comment.