Local

இலங்கைக்கு காத்திருக்கும் அடுத்த நெருக்கடி!

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக நாடு முழுவதும் கடுமையான மின்சார தடை ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஒரு நாளுக்கான எரிபொருள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் இரண்டு இயந்திரங்களில் சுமார் 4 நாட்களுக்கு எரிபொருள் எண்ணெய் இருப்பதாகவும், வெஸ்ட்கோஸ்ட் அனல்மின் நிலையத்தில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் எண்ணெய் இருப்பு மட்டுமே இருப்பதாகவும் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சோஜிஸ்ட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் வடக்கு ஜனனி மின் உற்பத்தி நிலையம் ஆகியவை எரிபொருள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நீர் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது ஓரளவு இயங்குவதால் சமாளிக்க முடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading