Local

இலங்கையர்கள் திருட்டுத்தனமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்த சொத்துக்களை கொண்டு வர நடவடிக்கை!!

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை முறைமைக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பை வழங்க, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஸ்டார் அமைப்பின் (StAR initiative) உயர் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில்நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் நடைபெற்றது.

அதற்கமைய, குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் கீழ், ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading