Local

இலங்கையில் இந்தியர்களுக்கு 5 வருட விசா!

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல இந்திய வர்த்தகர்களுக்கு ஐந்து வருட விசாக்களை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இலங்கையில் வர்த்தகம் செய்வதை இலகுவாக அதிகரிப்பதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் உதவும் ஒரு நடவடிக்கை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகிறது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவை கடந்த வாரம் சந்தித்தார். 

வர்த்தக அளவை அதிகரிப்பது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கான தளங்களை உருவாக்குதல் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன. 

இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகையின் கீழ் இலங்கையின் குழந்தைகளுக்கான பால் மா இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading