இலங்கையில் சத்திர சிகிச்சை நிபுணத்துவத்தில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் புதியதொரு தரநியமத்தை நிலைநாட்டியுள்ளது
ஒவ்வொரு மாதமும் 1,000-க்கும் மேற்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம், இலங்கையில் பாதுகாப்பான, நிபுணத்துவம் மிக்க சத்திர சிகிச்சைக்கான ஒரு முன்னணி மையமாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. இந்த மருத்துவமனை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தரங்கள், அனுபவம் வாய்ந்த பல்துறை அணிகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட வழியில் சிகிச்சையின் பின் குணமடையும் வழிமுறைகளை ஒருங்கிணைத்து, நோயாளிகள் நோயைக் கண்டறிதலில் இருந்து சத்திர சிகிச்சை வரை சென்று, பின்னர் அதிக நம்பிக்கையுடன் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது.
இதய மற்றும் நரம்பியல் சத்திர சிகிச்சைக்கான பிரத்தியேக வசதிகள் உட்பட, 12 சத்திர சிகிச்சைக்கூடங்கள், மருத்துவமனையின் சத்திர சிகிச்சைத் திட்டத்தின் அளவுக்கு துணைபோகின்றன. 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவமனைக்குள்ளேயே உள்ள இரத்த வங்கி மற்றும் 24 மணி நேர அவசரகால ஆதரவு ஆகியவை, திட்டமிடப்பட்ட மற்றும் சிக்கலான சத்திர சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ ஆதரவை வழங்குகின்றன. தங்குதடையற்ற சிகிச்சைக்கு உதவுவதற்காக மருத்துவமனை போதுமான மருந்து கையிருப்புகளையும் பேணிவருகிறது, இது நோயாளியின் சத்திர சிகிச்சை நடைமுறையின் போது ஏற்படும் தாமதங்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
நோயாளியின் பாதுகாப்பு சத்திர சிகிச்சையொன்றுக்கு முன்பே தொடங்குகிறது. சத்திர சிகிச்சை அணிகள் ஒருங்கிணைந்த மருத்துவத் திட்டமிடல் மூலம் ஒவ்வொரு சத்திர சிகிச்சையையும் மதிப்பீடு செய்கின்றன. சிறப்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துகின்றன மற்றும் சத்திர சிகிச்சைக்குப் பிறகு சௌகரியத்திற்கு உதவ மேம்பட்ட வலி முகாமைத்துவ முறைகளைப் பயன்படுத்துகின்றன. மருத்துவ ரீதியாகப் பொருத்தமான இடங்களில், திசுக்களின் பாதிப்பைக் குறைக்கவும், மருத்துவமனையில் தங்கும் காலத்தைக் குறைக்கவும், நோயாளிகள் விரைவில் இயல்பு நடவடிக்கைகளுக்குத் திரும்ப உதவவும், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சத்திர சிகிச்சை நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அதன் விசேட நிபுணத்துவ மையங்கள் மூலம் இருதய, எலும்பியல், நரம்பியல், புற்றுநோயியல், உறுப்பு மாற்று மற்றும் வளர்சிதை மாற்ற சத்திர சிகிச்சைகளில் கணிசமான அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனை 10,000-க்கும் மேற்பட்ட இருதய சத்திர சிகிச்சைகளையும், 800-க்கும் மேற்பட்ட இருதய சிகிச்சைகளையும் நிறைவு செய்துள்ளது. மேலும், அதன் இருதய சிகிச்சை அணிகள் தற்போது ஒவ்வொரு மாதமும் 70-க்கும் மேற்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்கின்றன. பிரத்தியேக இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பைபாஸ் மாற்று சத்திர சிகிச்சை, வால்வு சத்திர சிகிச்சை மற்றும் பிறவி இருதய நோய்களுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட சிக்கலான சத்திர சிகிச்சைகளுக்கு அவை உதவுகின்றன.
35-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மருத்துவமனையின் எலும்பியல் அணி, 3,000-க்கும் மேற்பட்ட முழங்கால் மாற்று சத்திர சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளது. அதன் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைத் திட்டம், வெளிப்படையான மருத்துவ செயல்முறைகள் மற்றும் கடுமையான மருத்துவ நெறிமுறைகளின் துணையுடன், 1,250-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான சிகிச்சைகளை பதிவு செய்துள்ளது. 450-க்கும் மேற்பட்ட எடை குறைப்பு சத்திர சிகிச்சைகளையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறைவு செய்துள்ளது. இது இலங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையால் பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கையாகும். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரோல் போன்ற உடல் பருமன் தொடர்பான நோய்களை நிர்வகிக்க தகுதியான நோயாளிகளுக்கு உதவுகிறது.
நரம்பியல் மற்றும் முள்ளந்தண்டு சத்திர சிகிச்சையில், ஒவ்வொரு மாதமும் முள்ளந்தண்டு தொடர்பான சுமார் 100 சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தபட்ச ஊடுருவல் வழிமுறையுடன் சிகிச்சை பெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மருத்துவமனையில் தங்கும் காலம் சுமார் 24 மணிநேரமாகக் குறைக்கப்படலாம். புற்றுநோய் சத்திர சிகிச்சை அணிகள், மார்பகம், கேடயச் சுரப்பி (தைராய்டு), நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய்களையும் நிர்வகிக்கின்றன. இவற்றின் சிகிச்சைத் திட்டங்கள் நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், முடிந்தவரை செயல்பாட்டையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் சத்திர சிகிச்சை நிபுணத்துவ அணி கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு சிறந்த சத்திர சிகிச்சை முடிவு என்பது சத்திர சிகிச்சையால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. அது துல்லியமான வழிமுறையில் நோயைக் கண்டறிதல், கவனமான திட்டமிடல், ஒழுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் குணமடையும் போது நெருக்கமான கண்காணிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. ஒவ்வொரு நோயாளியும் அவர்களின் நிலை, அபாயங்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற கவனிப்பைப் பெறுவதற்காக எங்கள் அணிகள் பல்வேறு விசேட துறைகளில் இணைந்து செயல்படுகின்றன.”
பல நோயாளர்களுக்கும் குடும்பங்களுக்கும், செலவு குறித்த நிச்சயமற்ற நிலைமை, ஏற்கனவே கடினமாகவுள்ள நேரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் சத்திர சிகிச்சை மையம், முன்கூட்டியே நிதி தொடர்பான வழிகாட்டுதலையும், எதிர்பார்க்கப்படும் கட்டணங்கள் குறித்த தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. இது நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. மருத்துவமனையின் 0117 145 145 என்ற 24 மணி நேர மருத்துவர் உதவிச்சேவை இலக்கமும், உடல்நலம் குறித்த ஆதக்கங்கள் மற்றும் பொருத்தமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலுக்காக, தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களைப் பொதுமக்கள் நேரடியாக அணுக வழிவகுக்கிறது.
சத்திர சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு திட்டமிடப்படுகிறது. மருத்துவ அணிகள் வலி, நடமாட்டம், ஊட்டச்சத்து மற்றும் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கண்காணிப்பதோடு, நோயாளர்களையும் பராமரிப்பாளர்களையும் வீட்டில் குணமடைவதற்குத் தயார்படுத்துகின்றன. இந்த அணுகுமுறை, தவிர்க்கக்கூடியவற்றை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிப்பதைக் குறைப்பதையும், நோயாளர்களுக்கு மருந்துகள், தொடர் கவனிப்பு மற்றும் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்துத் தெளிவான புரிதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விசேட சிகிச்சைகளுக்காக ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் 50-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் உட்பட, அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு நோயாளர்களுக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் சேவை அளித்து வருகிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரநிலைகள், பல்வேறு வகையான சத்திர சிகிச்சைச் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த நோயாளி ஆதரவுச் சேவைகள் ஆகியவை, மேம்பட்ட மருத்துவச் சேவைக்கான நம்பகமான பிராந்திய மையமாக இலங்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றன.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தொடர்பான விபரங்கள்
இலங்கையின் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அறிமுகப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், இலங்கை மற்றும் பரந்த பிராந்தியத்திற்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் இந்நிறுவனம் உறுதியுடன் உள்ளது.

You must be logged in to post a comment.