Lead News

இலங்கையில் சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை?

இலங்கையில் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆயுட்காலம் முழுவதும் சிகரெட் விற்பனை செய்வதையும், கொள்முதல் செய்வதையும் முற்றாகத் தடை செய்யும் நோக்கில் ‘புகையிலையற்ற தலைமுறை’ (Tobacco Free Generation) என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் புதிய சட்டமூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் வெற்றிலையுடன் புகையிலை, பாபுல் மற்றும் மாவா போன்ற பொருட்களைக் கலந்து விற்பனை செய்வோருக்கு எதிராக ஒரு வருட சிறைத்தண்டனையுடன் கூடிய கடுமையான சட்ட நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading