Local

இலங்கையில் தவறான தொடர்பால் ஏற்பட்ட விபரீதம் தாய் கடத்தப்பட்டு கொலை!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தி, அவருடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரின் தாயை கடத்திச் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக அவரது மகள், சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

குறித்த சடலம் கடத்தப்பட்டதாக கூறப்படும் சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண்ணின் சடலம் என்றும் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதோடு, உரிமையாளரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னர், அவர்களை தேடி இருவருடன் ஹோட்டலின் உரிமையாளர் காரில் சென்றுள்ளார். இதன்போது மனைவியுடன் தப்பிச் சென்றவர் அங்கு இல்லாததால் குறித்த நபரின் தாயை கடத்திக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading