Uncategorized

இலங்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் வேலைவாய்ப்பின்மை 20% வரை அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் மனித வள மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் P.H.C.ஷிரோமாலி தெரிவித்தார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் சென்று, அங்குள்ள வேலைவாய்ப்பற்ற இளம் சமூகத்தினரின் பெயர்ப்பட்டியலை பெற்றுக்கொள்ளவும் அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading