World

இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு பலர் காயம்!

இஸ்ரேல் நாட்டில் நேற்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இலாட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். ஆயுதம் ஏந்திய இரு இளைஞர்கள் நடத்திய இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, தாக்குதல் நடத்தியவர்களின் கைகளில் துப்பாக்கி மற்றும் கோடாரி இருந்தது.

இருவரும் பூங்காவிற்கு அதிரடியாக நுழைந்து அங்கிருந்த மக்களை சரமாரியாக தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒருவன் மக்களை துப்பாக்கியால் சுட்டான். மற்றொருவன் கோடரியால் தாக்கினான். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர். காயமடைந்த 4 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading