World

ஈரானின் ஆன்மீக தலைவர் கொமேனி இறந்து விட்டார்?

காமேனி உயிரோடு இருக்கிறாரா? டிரம்ப்பின் ‘பகீர்’ அறிவிப்பை உடைத்தெறிந்த ஈரான்! அல் ஜசீரா வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!

உலகமே “காமேனி இறந்திட்டார் ” எண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொன்னதைக் கேட்டு உறைஞ்சு போயிருக்க, இப்ப ஈரான் தரப்பில இருந்து ஒரு அதிரடியான மறுப்பு அறிக்கை வந்திருக்கு. “எங்கட அதியுயர் தலைவர் முழு ஆரோக்கியத்தோட போர்க்களத்தை வழிநடத்துறார், அமெரிக்கா ஒரு மாபெரும் உளவியல் போரை (Psychological Warfare) நடத்திக்கொண்டிருக்கு” எண்டு ஈரான் இப்ப அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடியாச் சவால் விட்டிருக்கு.

இது பற்றிக் களத்தில் நின்றபடி, சர்வதேச ஊடகமான அல் ஜசீரா (Al Jazeera) வெளியிட்டுள்ள பிரத்தியேகத் தகவல்கள் இப்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

“எல்லாரும் உயிரோடு தான் இருக்கினம்!” – ஈரானின் அதிரடி அறிக்கை
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் அளித்த பேட்டியில், “அதியுயர் தலைவர் காமேனி, ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர் என முக்கியத் தலைவர்கள் அனைவரும் உயிருடன் பாதுகாப்பாக உள்ளனர்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீத் ரசாயி (Hamid Rasaei) தனது சமூக வலைத்தளப் பதிவில், “12 நாள் போரின் போது எப்படிக் காமேனி மன உறுதியுடன் இருந்தாரோ, அதேபோல இப்போதும் அவர் மிகச் சிறப்பாக உள்ளார். உலகளாவிய ஏகாதிபத்தியத்திற்கு (Global Arrogance) எதிரான போர்க்களத்தை அவர் தான் முன்னின்று வழிநடத்துகிறார்” என ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். காமேனியின் மக்கள் தொடர்பு அலுவலகமும் இது எதிரிகளின் “உளவியல் போர்” வதந்தி என முற்றாக மறுத்துள்ளது.

அல் ஜசீராவின் பகீர் ட்விஸ்ட் – பாஸ்டர் பகுதியில் நடந்தது என்ன?
ஈரான் இவ்வளவு உறுதியாக மறுத்தாலும், அல் ஜசீரா ஒரு முக்கியமான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்கள், முக்கிய ராணுவத் தலைமையகங்கள் அமைந்துள்ள டெஹ்ரானின் அதிபாதுகாப்பு வலயமான ‘பாஸ்டர்’ (Pasteur neighbourhood) பகுதியில் நேற்றைய தினம் பல பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அல் ஜசீரா உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, அந்தப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்திருப்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. ஆனால், அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் காமேனி அங்கு இருந்தாரா? இடிபாடுகளுக்குள் சிக்கினாரா? அல்லது பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே மாற்றப்பட்டாரா? என்பதுதான் இப்போதுள்ள மிகப்பெரிய மர்மம்!

சிவப்புக் கோட்டைத் தாண்டியதா அமெரிக்கா? காத்திருக்கும் உலகம்!
தற்போதைய நிலையில், காமேனி கொல்லப்பட்டார் என்பதற்கான எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் டெஹ்ரானில் இருந்து வெளிவரவில்லை. ஒருவேளை டிரம்ப் மற்றும் இஸ்ரேல் தரப்பு கூறுவது உண்மையாக இருந்தால், அமெரிக்கா ஈரானின் “மிக முக்கியமான சிவப்புக் கோட்டை” (Reddest of red lines) தாண்டிவிட்டது என்று அர்த்தம். இதன் விளைவுகள் உலகளாவிய ரீதியில் படுபயங்கரமாக இருக்கும்.

மாறாக ஈரான் கூறுவது உண்மை என்றால், காமேனி நலமுடன் இருப்பதை நிரூபிக்க அவர்கள் விரைவில் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நிலைமை மிகவும் குழப்பமாகவே (Fluid situation) நீடிக்கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading