உலகம் அழியப் போகிறதா?
சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கையின் ஒரு சிறு மாற்றத்தால்( வெறும்+ 3 degree Celsius )ஒட்டுமொத்த பூமியும் நிலைகுலைந்து போனது.
1876 முதல் 1878 வரை நீடித்த அந்த ‘Super El Niño ‘ எனும் காலநிலை பேரிடர், சுமார் 5 கோடி மக்களின் உயிரைப் பறித்து, வரலாற்றில் ஒரு கறைபடிந்த பக்கமாக இன்றும் எஞ்சியுள்ளது.
El Niño என்றால் என்ன?
அது ஏன் இவ்வளவு ஆபத்தானது?
மீண்டும் அது ஒரு பேரழிவை ஏற்படுத்துமா?
வாருங்கள் பார்ப்போம்.
El Niño என்ற பெயர் கேட்பதற்கு ஏதோ ஒரு அறிவியல் குறியீடு போலத் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் இது ஒரு சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டது.
ஸ்பானிஷ் மொழியில் இதற்கு “சிறு குழந்தை” அல்லது “கிறிஸ்து குழந்தை” என்று பொருள்.
17-ஆம் நூற்றாண்டில் Peru நாட்டு மீனவர்கள் இதனை முதன்முதலில் கவனித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்திற்கு அருகில், பசிபிக் பெருங்கடலில் கடல் நீரின் வெப்பம் சற்றே அதிகரிப்பதை அவர்கள் கண்டனர்.
இது இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடையதாக அவர்கள் கருதியதால், இந்த நிகழ்வுக்கு ‘El Niño ‘ என்று பெயர் சூட்டினர்.
ஆனால், பிற்காலத்தில் இது உலகளாவிய காலநிலையைச் சிதைக்கும் ஒரு பெரும் சக்தியாக உருவெக்கும் என அவர்களுக்கு தெரியவில்லை.
என்ன நடந்தது அந்த 1876-1878 காலகட்டத்தில்?
அன்றைய காலகட்டத்தில், நவீன அறிவியல் வசதிகள் கிடையாது. பசிபிக் கடலில் ஏற்பட்ட இந்த விசித்திரமான வெப்ப உயர்வு, உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலையைத் தலைகீழாக மாற்றியது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் பருவமழை முற்றிலுமாக பொய்த்தது.
விளைநிலங்கள் காய்ந்து சருகாகின, ஆறுகள் வறண்டன.
இதன் விளைவாக ஏற்பட்ட பசி மற்றும் வறுமை, சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவு வாங்கியது.
மனித வரலாற்றிலேயே மிக மோசமான காலநிலைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று.
El Niño என்பது ஒரு இயற்கையான காலநிலை சுழற்சியாகும். மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வழக்கத்தை விட அதிகமாகச் சூடாகும்போது, வளிமண்டல சுழற்சி மாறுகிறது.
இது உலகெங்கும் வானிலை அமைப்புகளைச் சீர்குலைக்கிறது. இதனால் சில இடங்களில் கடும் வறட்சியும், மற்ற சில இடங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
இது உணவுப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை நேரடியாக அச்சுறுத்தும் ஒரு காரணியாகும்.
1870-களில் இருந்த தொழில்நுட்பத்திற்கும் இன்றைய காலத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
இன்று செயற்கைக்கோள்கள் மற்றும் மேம்பட்ட காலநிலை மாதிரிகள் மூலம், ஒரு El Niño நிகழ்வை பல மாதங்களுக்கு முன்பே நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.
முன்கூட்டியே அரசுகள் எச்சரிக்கை விடுவிப்பதன் மூலம், பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாக்கவும், உணவுத் தேவையைச் சமாளிக்கவும் நவீன வசதிகள் உள்ளன.
நவீன தொழில்நுட்பம் இருந்தாலும், நிபுணர்கள் ஒரு எச்சரிக்கையைத் தொடர்ந்து விடுக்கின்றனர்.
காலநிலை மாற்றம் (Climate Change) காரணமாகப் புவி வெப்பமடைந்து வரும் இந்தச் சூழலில், எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு ‘Super El Niño ‘ மிகவும் வீரியமிக்கதாக இருக்கலாம்.
அதே நேரம் ,நாம் HAARP (High-frequency Active Auroral Research Program) போன்ற தொழில்நுட்பங்கள் மீது சந்தேகக் கண்களுடன் நோக்க வேண்டும்.
வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் கதிர்வீச்சுகளைப் பாய்ச்சி, வானிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த HAARP technology மூலம் நிலநடுக்கம், சுனாமிகள், floods, Hurricanes, heatwaves போன்ற disaster களை உருவாக்கலாம்.
El Niño போன்ற நிகழ்வுகளை haarp technologyயால் தூண்டுவதன் மூலம், ஒரு நாட்டின் விவசாயத்தை முடக்கி, அந்த நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்ய முடியும் .
உலக மக்கள் தொகை பெருக்கம் பூமியின் வளங்களுக்குச் சுமையாக இருக்கிறது என்று கருதும் ஒரு சிறிய ‘ஆளும் வர்க்கம்’ (Global Elite), உலக மக்கள் தொகையைக் குறைக்கவும், வளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இத்தகைய காலநிலை மாற்றங்களை ஒரு ‘மறைமுக ஆயுதமாக’ (Climate Weapon) பயன்படுத்திவருக்கின்றனர்.
எவ்வாறெனில்
செயற்கையான வறட்சி மூலம் விவசாயத்தை அழித்து, உணவுத் தேவையை உருவாக்கி, நாடுகளை அடிபணிய வைப்பது.
கடுமையான வறட்சி மற்றும் வெள்ளம் மூலம் மக்கள் தொகை அடர்த்தியைக் குறைப்பது.
காலநிலை மாற்றத்தின் மூலம் உலக நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘புதிய உலக ஒழுங்கு’ (New World Order) கொள்கைகளைச் செயல்படுத்துவது.
1870-களில் இயற்கையின் சீற்றத்திற்கு மனிதன் பலியானான். ஆனால், இன்று வானிலை முன்னறிவிப்பு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் நம் கையில் உள்ளன.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பங்களே சில சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற பயம் நீங்கவில்லை.
காலநிலை மாற்றம் என்பது புவி வெப்பமடைதலால் மட்டும் ஏற்படுகிறதா அல்லது திட்டமிடப்பட்ட ‘Super El Niño “ haarp technology போன்றவற்றால் தூண்டப்படுகிறதா என்ற சந்தேகம் நமக்குள் ஏற்படுகிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது போன்ற ஒரு பேரழிவு மீண்டும் நிகழும் சூழல் இன்று உருவாகியுள்ளது.
ஆனால், இம்முறை இது இயற்கையின் சீற்றமா அல்லது மனிதர்கள் வடிவமைக்கும் சதியா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக உள்ளது.
எது எப்படியிருப்பினும், இயற்கை வளங்களையும், காலநிலை மாற்றத்தையும் வெறும் அரசியல் மற்றும் அதிகார விளையாட்டாக மாற்றாமல், மனித குலத்தின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

You must be logged in to post a comment.