Local

உலக நாடுகள் பிரதமர் ரணிலுக்கு வழங்கிய உறுதிமொழி!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அனைத்து மீளாய்வுகளும் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றுடன் உதவித்தொகையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, ​​சுகாதாரத் துறை, உணவுத் துறை, விவசாயத்திற்கு தேவையான உரம் என்பனவற்றுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என உறுதிமொழி வழங்கியுள்ளார்கள்.

உதவித் தொகை அதிகரிக்கும் போது, ​​பொருளாதாரத் துறைக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். முன்னர் கலந்துரையாடப்பட்ட அனைத்து நாடுகளும் தற்போது இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading