Uncategorized

எலிகளிடம் மூன்று வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள எலிகளிடம் உருமாறிய மூன்று வகையான கொரோனா வைரஸ்களும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், அறிவியல் இதழிலில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, எலிகளிடம் சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வகையைச் சேர்ந்த ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் ஆகிய வைரஸ்கள் இருப்பதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 79 எலிகளில் 13 எலிகளிடம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எலிகளிடமிருந்து மனிதருக்கு கொரோனா பரவியதா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

எலிகளை எவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கியது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும் உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading