Sports

ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட ஏஞ்சலோ மெத்யூஸ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஒரு ஓட்டத்தால் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை தவறவிட்டார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துர்திஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக அவர் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டுள்ளார்.

மேலும், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும் குசல் மெந்திஸ் 54 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 36 ஓட்டங்களையும் இலங்கை அணி சார்பில் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் நஹீம் ஹசன் 6 விக்கெட்டுக்களையும் சகிப் ஹல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading