Local

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.

முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரு தொன் யூரியாவின் விலை 1282 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த விலையில் யூரியாவைக் கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி விலை 500 ரூபாவைத் தாண்டும் எனவும் இன்று இலங்கையில் 25 கிலோ யூரியா மூடை ஒன்று 9000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading