கருவின் கொடும்பாவியை எரித்து மஹிந்த அணி இராகலையில் போராட்டம்!
பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று இராகலையில் கையெழுத்து வேட்டையில் இறங்கியது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி 10 இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையை மஹிந்த அணி நேற்று முன்தினம் கடவத்தையில் ஆரம்பித்தது. நேற்று ஹட்டனிலும், நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று இராகலையில் கையொப்பங்கள் திரட்டப்பட்டன.
இதற்கான நிகழ்வு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் நடைபெற்றது.
பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோஷங்கள் எழுப்பட்டதுடன், சபாநாயகரின் கொடும்பாவியை எரித்து, ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக இதன்போது போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். பேரணியையும் நடத்தினர்.
க.கிசாந்தன்
