காசாவில் அதிரடி தாக்குதல் 21 இஸ்ரேலிய வீரர்கள் பலி
தெற்கு காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் ஒன்றில் 21 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
காசா எல்லைக்கு அருகில் பாலஸ்தீனர்களின் வீடுகளை இடிப்பதற்காக இஸ்ரேலிய பொறியியல் பிரிவினர் வெடிபொருட்களைப் பொருத்தித் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், சுரங்கப்பாதை வழியாக வந்த தாக்குதல்தாரிகள் ஆர்.பி.ஜி (RPG) ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தால், வீரர்கள் தங்கியிருந்த இரண்டு அடுக்குமாடி கட்டிட வளாகங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் இருந்த டாங்க் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

You must be logged in to post a comment.