Local

குடும்ப கொண்டாட்டத்திற்கு அமைச்சின் நிதியை செலவிட்ட வீரவன்ச!

நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்தின் சார்பில் மூன்று அமைச்சர்கள் மாத்திரமே பிரச்சன்னமாகியிருந்ததாக ஹேஷா வித்தானகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர். நாடாளுமன்றின் பின்வாயில் பகுதியிலும் இளைஞர்கள் தற்போது வந்துள்ளமையால், அரசாங்க உறுப்பினர்கள் தப்பிச்சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சி தலைவர்கள் எவருமே நாட்டை பற்றி பேசுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை விமல் வீரவன்ச தமது மனைவியின் கடவுச்சீட்டு குற்றச்சாட்டை விலக்கிக் கொள்வதற்காகவே நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று விதானகே குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டுக்கு மாத்திரமல்ல, தமது தங்கையின் மகளது நிகழ்வு ஒன்றையும் அவர் தமது அமைச்சின் செலவில் விமல் வீரவன்ச நடத்தியுள்ளார்

எனவே இராணுவ அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஒழுக்கமுள்ளவராக இருந்தால், விமல் வீரவன்சவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஹேஷா விதானகே கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading