Uncategorized

கையடக்க தொலைபேசியால் ஆபத்து – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

 

மருத்துவ நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதிக நேரம் கையடக்க தொலைபேசி அல்லது கணினி பயன்படுத்துவது உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகளை கொடுக்கும் என்று கூறிவருகின்றனர்.

இதன் காரணமாக சமீபத்தில் கூட ஒரு பெண் தனது கண் பார்வையை இழந்ததாக செய்திகளை படித்தோம். ஆனால், அப்படியும் இந்த பயன்பாடுகளை நாம் குறைத்துக் கொண்ட பாடில்லை.

இந்த கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் கண் பார்வை மட்டுமல்லாமல் நமக்கு டெக்ஸ்ட் நெக் சென்ட்ரம் என்ற கழுத்து நரம்பு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்த பிரச்சனை பலருக்கு காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கழுத்து பிரச்சனையால் தோள்பட்டை வலி, தலைவலி, மன உளைச்சல் மற்றும் தூக்கமற்றுபோவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சனைகளுக்கு வலி நிவாரணியை பயன்படுத்துவது மட்டுமே ஒரு தீர்வாக இருக்காது. கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக் கொண்டு அனைவரும் யோகா செய்வதுதான் சரியான தீர்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading