World

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மும்பை சென்ட்ரலில் உள்ள பி.ஒய்.எல். நாயர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்காக 110 படுக்கைகளை கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் இந்த வார்டில் சேர்க்கப்பட்டார். இந்த பெண் கடந்த 6 மாதங்களாக தனியார் மருத்துவமனையில்தான் பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததும் அந்த கர்ப்பிணி பெண்ணை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண் நாயர் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு நேற்று முன்தினம் நடந்த பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து நாயர் மருத்துவமனை டாக்டர் கணேஷ் ஷிண்டே கூறுகையில், ”பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். அவர் 2 ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. தலா 2 கிலோ எடையுடன் பிறந்த மூன்று குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading