Uncategorized

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடக்கும் அட்டகாசம்!

காலி வீதி – கொள்ளுப்பிட்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், சம்பவம் குறித்து இவர்களிடம் விசாரணை நடாத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மசாஜ் நிலைய முகாமையாளரான பெண்ணையும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றுமொரு பெண்ணையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading