Local

சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்கவுக்கு விளக்கமறியல்!

கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்படட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தவிர டேன் பியசாத், மொறட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ உட்பட மேலும் பலர் இன்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading