சவுதி இளவரசரிடம் தோற்றுப் போன பணமும் அதிகாரமும்..!!
பணமும் அதிகாரமும் சவுதியிடம் தோற்றுப் போன நிமிடம்! கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட சவுதி இளவரசர்!
கோடிக்கணக்கான ‘பணம்’ மற்றும் அரச குடும்பத்தின் எவ்வளவோ அழுத்தங்கள், ஆனால், “என் மகனின் உயிரை பணத்திற்கு விற்க மாட்டேன்” என்று அந்தத் தந்தை காட்டிய உறுதியும், இளவரசர் என்றாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனத் தூக்கு மேடைக்கு உத்தரவிட்ட மன்னர் சல்மானின் அதிரடியும் உலகையே மிரள வைத்துள்ளது!
உலக வரலாற்றில் சட்டமும் நீதியும் பெரும்பாலும் எளியவர்களுக்கே கடுமையானதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவும் வளைக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 சவுதி அரேபியாவில் நடந்த ஒரு சம்பவம், இந்த உலகப் பொதுப்புத்தியை முற்றாக மாற்றி அமைத்தது
சவுதி அரச குடும்பத்தின் செல்வாக்கு மிக்க இளவரசர் துர்கி பின் சவூத் அல்-கபீர் என்பவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, நீதியின் வரலாற்றில் ஒரு தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயமாகும்
2012ஆம் ஆண்டு ரியாத் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாலைவன முகாமில் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடியிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அங்கு நண்பர்களுக்கு இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது
கோபத்தின் உச்சிக்குச் சென்ற இளவரசர் துர்கி பின் சவூத், தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டார் அந்தத் தோட்டாக்கள் பாய்ந்தது எதிரியிடம் அல்ல; அவரது நெருங்கிய நண்பரான அடெல் பின் சுலைமான் அல்-முஹைமீத் என்ற சவுதி குடிமகனின் மீதுதான் அடெல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்
தான் செய்த தவறை உணர்ந்த இளவரசர் துர்கி, தப்பி ஓடாமல் பொலிஸாரிடம் சரணடைந்தார்
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘இரத்தப்பணம்’ (Blood money) எனப்படும் இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னித்தால் மரண தண்டனை ரத்து செய்யப்படும்
இளவரசர் துர்கி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் காப்பாற்ற நூற்றுக்கணக்கான மில்லியன் சவுதி ரியால்கள் இழப்பீடாகத் தயாராக வைக்கப்பட்டது
அரச குடும்பத்தின் மூத்த தலைவர்கள் பலர், கொல்லப்பட்ட அடெலின் தந்தை சுலைமான் அல்-முஹைமீத்திடம் தூது சென்று மன்னிப்பு கோரினர்
ஆனால், அந்தத் தந்தை அசையவில்லை. தண்டனை நிறைவேற்றப்படும் இறுதி நிமிடத்தில் கூட, அவரது காலடியில் கோடிக்கணக்கான பணம் கொட்டப்படத் தயாராக இருந்தது கண்ணீருடன் அந்தத் தந்தை சொன்ன வார்த்தைகள் உலகையே உலுக்கியது:
“என் மகனின் உயிருக்கு இந்த உலகத்தின் எந்தப் பணமும் ஈடாகாது. பணத்திற்காக என் மகனின் மரணத்தை நான் விற்க மாட்டேன். இறைவனின் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.”
அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணியாத அந்தத் தந்தையின் நீதிக்கான உறுதியே, இந்த வழக்கின் மிக உருக்கமான மற்றும் உன்னதமான திருப்புமுனையாக அமைந்தது
இந்த வழக்கில் சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் வரை மரண தண்டனையை உறுதி செய்தது. எனினும், இறுதி மரண தண்டனைப் பேராணையில் கையெழுத்திடும் இறுதிப் பொறுப்பு மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் வசம் வந்தது
சவுதி அரேபியாவில் ஒரு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் வரை தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், இறுதி மரண தண்டனைக்கான பேராணையில் (Death Warrant) மன்னர் கையெழுத்திடுவது கட்டாயமாகும்
சவுதி அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கான இளவரசர்கள் இருந்தாலும், குற்றவாளியான இளவரசர் துர்கி சார்ந்திருந்த ‘அல்-கபீர்’ குடும்பக் கிளை மிக முக்கியமானது. இவரைக் காப்பாற்ற அரச வம்சத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் மன்னருக்குத் தூதரக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர்.
2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் சவுதி அரேபியா கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தது.
அரச மானியங்கள் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவியது.
அரச குடும்பத்தினர் என்ன செய்தாலும் தப்பி விடுவார்களா?” என்ற மறைமுகக் கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது.இத்தகைய இக்கட்டான அரசியல் மற்றும் சமூகச் சூழலில்தான், மன்னர் சல்மான் எவ்விதப் பரிந்துரைகளுக்கும் பணியாமல், சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்த அந்த ஆணையில் கையெழுத்திட்டார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதி உள்நாட்டு அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வமான மற்றும் கடுமையான அறிக்கையை வெளியிட்டது:
“இறைவனின் சட்டத்தை (ஷரியா) நிலைநாட்டுவதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் இரத்தத்தைச் சிந்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதிலும் சவுதி அரேபிய அரசு மிகவும் உறுதியாக உள்ளது என்பதை இந்த நடவடிக்கை மூலம் அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.
“மன்னர் சல்மான் தனது தனிப்பட்ட உரையாடல்களிலும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். குரானின் போதனைகளின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழு நீதி கிடைக்க வேண்டும்” என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்
மன்னரின் இந்த அதிரடி முடிவு அரச குடும்பத்திற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்கள் சட்டத்தின் முடிவிற்குத் கட்டுப்பட்டவர்களே

You must be logged in to post a comment.