சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ;
சீனா நாட்டின் ஷின்ஜியாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55 மணியளவில் பதிவாகியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.