Local

ஜுன் முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் 7 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை நாட்டிற்குள் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் நாட்டிற்கு இறக்குமதி செய்வதனை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலாக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்துகின்ற பானம் அருந்தும் ப்ளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள், ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை (யோகட் கப் தவிர்ந்த), கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள், ப்ளாஸ்ரிக் மாலைகள், ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள் என்பன இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading