டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்! நெதன்யாகு குற்றச்சாட்டு!!
ஈரான் தங்கள் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முதல் எதிரியாக அமெரிக்க அதிபரை கருதுவதால், டிரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளது, “டிரம்ப ஒரு தீர்க்கமான தலைவர். ஈரான் அரசிடம் பேரம் பேசும் பாதையை டிரம்ப் தேர்ந்தெடுக்கவில்லை. போலி ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். காசிம் சுலைமானியை கொலை செய்தார். ஈரான் அரசிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என அவர் உறுதியாக உள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை எதிர்ப்பதில் டிரம்பின் ‘இளைய கூட்டாளி போல் நான் இருக்கிறேன். எனவே ஈரான் என்னையும் குறிவைத்துள்ளது. எனது படுக்கையறை ஜன்னல் அருகே ஏவுகணை வீசப்பட்டது. இஸ்ரேல் தற்போது அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. எனவே ஆக்ரோஷமாக செயல்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளத என்று
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். –

You must be logged in to post a comment.