Uncategorized

தொலைபேசியில் பேசியதால் காதை பறிகொடுத்த நபர்!

பதுளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை நபர் ஒருவர் துண்டித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் வீதியைக் கடக்கும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த அதே பாதசாரி கடவையை கடந்த மற்றுமொரு நபர், தாம் வைத்திருந்த கத்தியினால் அவரின் காதை துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட தேவையை கொண்டவரின் காதை துண்டித்தவர், அவரை நிலத்தில் வீழ்த்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்ற தாக்குதல்தாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading