Local

“தௌஹித் ஜமாத்”அமைப்பின் போராட்ட பிரசுரங்களுடன் 3 இளைஞர்கள் வெலிமடையில் கைது

வெலிமடை பொலிஸாரும், விமானப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் குண்டுகளை தூர இடத்திலிருந்து வெடிக்க வைக்கும் பெருமளவிலான வயர்கள் மற்றும் “தௌஹித் ஜமாத்”அமைப்பின் போராட்ட துண்டுப்பிரசுரங்கள் ஆகியனவும் மீட்கப்பட்டன.


வெலிமடைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிசார் தியத்தலாவை விமானப் படையினருடன் இணைந்து, மேற்படிதேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வயர்களை மீட்டபொலிசாரும், விமானப்படையினரும் இவற்றிற்கு உரிமையாளர்களென்று கருதப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.

பொலிசாரும்,விமானப்படையினரும் இணைந்துமேற்படிசம்பவம் குறித்துதீவிரபுலன் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.

பதுளை நிருபர் – எம். செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading