Cinema

நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் சரமாரியான அட்வைஸையும் கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் வெளிநாட்டு ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இதற்கு நுழைவு வரி செலுத்த வணிகவரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரி மனு ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்க அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தியது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading