Local

பத்து விநாடிகள் தொடர்ச்சியாக உங்களால் மூச்சை அடக்கி வைக்க முடிந்தால் கொரோனா தொற்று இல்லையா?

10 விநாடிகள் தொடர்ச்சியாக உங்களால் மூச்சை அடக்கி வைக்க முடிந்தால் கொரோனா தொற்று இல்லை என அர்த்தம் என தகவல் பரவிய நிலையில் அது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை விட, அது தொடர்பாக வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.

வெயிலில் கொரோனா பரவாது, பூண்டு உணவில் சேர்த்துக்கொண்டால் கொரோனா குணமாகும் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றது.

அதேபோல, 10 விநாடிகள் தொடர்ச்சியாக உங்களால் மூச்சை அடக்கி வைக்க முடிந்தால் கொரோனா தொற்று இல்லை என்றும், இருமல் இல்லை என்றாலும் கொரோனா இல்லை என்றும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

அது தொடர்பான அறிக்கையில், 10 விநாடிகள் தொடர்ச்சியாக மூச்சை அடக்கி வைக்க முடிந்தால் கொரோனா தொற்று இல்லை என்ற தகவலை போலிச்செய்தி என்று கூறியுள்ளது.

மேலும் உரிய பரிசோதனையின் மூலமே கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading