Local

பாடசாலை ஆசிரியர் மீது மாணவர்கள் பாலியல் புகார்

பாடசாலையில் முன்னாள் மற்றும் தற்போது பயிலும் மாணவர்கள் பலர் சேர்ந்து தங்கள் பள்ளி ஆசிரியர் ஓருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவின் நவி மும்பையில்உள்ள ஒரு பள்ளியில் அரங்கேறியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அந்த ஆசிரியர் பல மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த ஆசிரியர் இன்ஸ்டாகிராம் பிரைவேட் சாட்டில் மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய உரையாடலின் புகைப்படங்கள் வெளிவந்ததால் அவர் சிக்கியுள்ளார்.
ஆசிரியர் தங்களைத் தகாத முறையில் தொட்டதாகவும், மாணவிகளின் உள்ளாடைகள் குறித்த கருத்துக்களை அனுப்பியதாகவும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவிகள் மட்டுமல்ல இவர் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. பள்ளியில் பயிலும் மானவர்க்ளின் பிறப்புறுப்பைப் பிடிப்பது போல அவர்களையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு பள்ளி மாணவி ஒருவர் மழையில் நனைந்து வந்தபோது அவரின் உள்ளாடை தெரியவே அது பற்றி அந்த மாணவியிடம் தகாத முறையில் பேசியுள்ளார். பிறகு அதனால் பின்பு பிரச்சனை ஏற்படும் என நினைத்து அந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இவ்வாறு அந்த ஆசிரியரின் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பின் சில மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு ஆசிரியர் பற்றி ஈமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். புகார் பற்றி தெரிய வந்த பள்ளி முதல்வர் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டிக்கு இதை தெரியப்படுத்தியுள்ளார், மேலும் இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது கடுமையான மற்றும் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading