World

பாரீஸ் தேவாலயத்தை புனரமைக்க 9 வயது சிறுமி நன்கொடை

இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டொலரை   பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயத்தில், கடந்த 15 ஆம் திகதி    பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.

பிரான்சின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படும் இந்த தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அதிபர் மெக்ரான் உறுதி பூண்டுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டொலரை ( பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். பாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 அமெரிக்க டாலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பினாள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading