Local

பிரதமர் ரணில் தீர்வை தருவார் சம்பந்தன் தெரிவிப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளகூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

” புதிய அரசு மேற்கொள்ளும் சகல நடவடிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்பது இதன் மூலம் அர்த்தமாகாது. எனினும், மக்களின் நலனுக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும்.” எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் அவருக்கு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து நன்கு தெரியும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காண்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக இலகுவானது எனவும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பலமாக அரசாங்கத்தை கட்டியெழுப்பிய பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading