Local

புதிய அரசமைப்புக்கு சாவுமணி அடிக்கிறது சங்கசபை! போராட்டத்தில் குதித்தார் தேரர்!!

புதிய அரசமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசமைப்பு தேவையில்லை என மகாநாயக்க தேரர்கள் அறிவிப்பு விடுத்துள்ள  நிலையில்,

 

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியே குறித்த தேரர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், இலங்கையில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading