Local

மஹிந்த ராஜபக்சவின் நாய்க்குட்டியை திருடியவரிடம் விசாரணை!

வீரகெட்டிய – தங்காலை வீதியில் உள்ள மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த மூன்று நாய்க்குட்டிகள் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போயுள்ளன.

ஒரு கும்பல் கார்ல்டன் வீட்டில் குதித்து சொத்துக்களை தாக்கியதில் இருந்து மூன்று நாய்க்குட்டிகள் காணவில்லை.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான வீரகெட்டிய – பெலியத்த வீதியிலுள்ள வீடொன்றில் காணாமல் போன லாப்ரடோர் நாய்க்குட்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முன்னாள் எம்.பி.யின் 21 வயது மகள் சந்தேகத்தின் பேரில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த 9 ஆம் திகதி நாய்க்குட்டியை அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீரகெட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் சங்கீத் மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading