Local

மாணவர்கள் சற்றுலா சென்ற படகு விபத்து 4 பேர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவெந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன் சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

களுவெந்தன் வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.போ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சேர்ந்த சுற்றுலா குழு ஒன்று தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.

இதன்போது மாணவர்கால் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை காப்பாற்ற முயற்சித்த ஆசிரியரும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர்களது சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading