Local

ரணில்,கோட்டா அரசை மகாசங்கத்தினர் நிராகரித்துவிட்டனர்!

ரணிலின் மீதும் கோட்டா மீதும் மகாசங்கத்தினர் நம்பிக்கையிழந்துவிட்டனர் எனவும், கோட்டா – ரணில் அரசாங்கத்தினை மகாநாயக்கர்கள் நிராகரித்துவிட்டனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வாக சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தீர்வு என மகாநாயக்கர்கள் கருதுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடும் அதுவே என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மகாசங்கத்தினரைப் பற்றி கவலைப்படாத, கருத்திற் கொள்ளாத அரசாங்கமாக இருக்கிறது. வரிசைகளில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று இறந்திருக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே முழுக்க முழுக்க பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading