Uncategorized

ரயில் நிலைய திரையில் காண்பிக்கப்பட்ட ஆபாச படங்கள்!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து திரைகளிலும் கடந்த 20 ஆம் திகதி இரவு ஆபாச காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோ கிளிப் 3 நிமிடங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் நிலையத்தில் வழக்கம்போல் விளம்பரங்களுக்குப் பதிலாக வழக்கத்திற்கு மாறான திரைப்படம் திடீரென திரையிடப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கும், ஆச்சரியத்துக்கும் ஆளாகினர்.
அப்போது பரபரப்பான பாட்னா ரயில் நிலையத்தில் ஏராளமான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக செயல்பட்ட பயணிகள் இது குறித்து ரயில்வே பொலிசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு பிரிவினரிடம் புகார் அளித்ததையடுத்து, ரயில் நிலைய காட்சி திரையில் விளம்பரம் செய்யும் தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading