ராஜபக்ச குடும்பம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை களவாடியதாக சந்திரிகா குற்றச்சாட்டு!!
ராஜபக்ச குடும்பத்தினர் இந்த நாட்டில் ஒன்பது வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை களவாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் எடுத்த கணக்கெடுப்பில் ஒரே குடும்பத்திலுள்ள நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு மகன்மார்கள், ஒரு மச்சான் இந்த நாட்டில் 2006 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2014 கடைசி வரை பாரிய திட்டங்களில் மட்டும் பல கோடி ரூபாவை கையூட்டாக பெற்றுள்ளனர். இதனாலேயே நாடு வங்குரோத்தானது.
நான் பதவியில் இருந்து விலகுவதற்கு முன் பல அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாரிய ஆறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தேன். அதில் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் காணப்பட்டன.
ராஜபபக்ச காலத்தில் 6 தொடக்கம் 9 வீதம் வட்டிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அதில் சில வீதங்கள் அவர்களின் கணக்குகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எந்த அரசியல் தலைவரும் அவ்வாறான ஒரு வட்டிக்கு கடன் வாங்கமாட்டார்.

You must be logged in to post a comment.