Local

ரிஷாத் அரசாங்கத்துடன் இணைய முற்பட்டால் என்ன நடக்கும்?

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக கூறப்படும் செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் விமல் வீரவன்சவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அவர், ரிஷாதை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் எவரும் அரசாங்கத்தல் இல்லை என்று கூறினார்.

ஒருவேளை அவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டால் அந்த அரசாங்கத்தில் நீங்கள் இருப்பீர்களா என்று இதன்போது விமல் வீரவன்சவிடம் வினவப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அவர், நாம் உருவாக்கிய அரசாங்கத்தில் நாம் இருக்காமல் வேறு யார் இருப்பது என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், அவ்வாறு ரிஷாத் அரசாங்கத்துடன் இணைய முற்பட்டால் அவரை தாம் விரட்டியடிப்பதாகவும் கூறினார்.

அண்மைய நாட்களாக ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளதுடன், ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பிலும் ஊடகங்களில் எதிர்மறையான செய்திகள் வௌிவருகின்றமை கூறத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading